search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆய்வுக் கூட்டம்"

    • பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்து சிறையில் இருந்து வந்தார்.
    • வைத்தியநாதன் மற்றும் சுரேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப் பட்டது.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த தொரப்பாடியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மணிகண்டன்(28), திருமணமானவர்.இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட புகாரின்பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்து சிறையில் இருந்து வந்தார்.

    சிறையில் இருந்து ஜாமீனில் வந்து மீண்டும் அதே சிறுமியை கடத்தி சென்றதாக புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த 6 மாதங்களாக தேடப்பட்டு வந்தார்.இந்த நிலையில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டத்தில் ஆய்வு செய்த டி.எஸ்.பி.சபியுல்லா உத்தரவின் பேரில் புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி, போலீஸ்கா ரர்கள் வைத்திய நாதன் மற்றும் சுரேஷ் ஆகி யோர் கொண்ட தனிப்படை அமைக்கப் பட்டது. தனிப்ப டை போலீசார் கன்னியா குமரி, நாகர் கோவில், திரு வண்ணா மலை ஆகிய இடங்களில் தேடி மணி கண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மணிகண்டனை கைது செய்த தனிப்படை போலீ சாரை பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா பாராட்டினார்.

    • வங்கிகளுக்கு அதிரடி உத்தரவு
    • அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், முதல் அமைச்சரின் சிறப்பு திட்டங்கள் அறிவிப்பின் பணிகள் முன்னேற்றம் குறித்தும் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் வளர்மதி முன்னிலை வகித்தார்.

    கூட்டத்திற்கு ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பிற்படுத்தப்பட்டோர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆணையருமான வி.சம்பத் தலைமை தாங்கி பேசினார்.

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலமாக செயல்ப டுத்தப்பட்டு வரும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றங்கள் குறித்தும், இத்திட்டத்தில் பல்வேறு துறைகள் இணைந்து மக்களுக்கான வளர்ச்சி களை மேற்கொள்ள திட்டத்தினை செயல்ப டுத்தவும் கேட்டுக் கொண்டார்.

    மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படாமல் உள்ள கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடத்திட உத்தரவிட்டார்.

    நிலுவையில் உள்ள பணிகளை விரைவாக முடிக்கவும். புதிய பள்ளிகட்டிடங்கள் கட்டும் பணி விரைவாக முடிக்கவும், முதல் அமைச்சரின் காலை உணவு திட்டப் பணிகளுக்கு கட்டப்பட்டு வரும் சமையற்கூடங்கள் பணிகளையும் விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.

    மேலும் இல்லம் தேடி கல்வி செயல்பாடுகளையும் கேட்டறிந்தார். புதுமைப் பெண் திட்டத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை கிடைக்க பெறாமல் உள்ளவர்களுக்கு விரைவாக வங்கிக் கடன் அட்டை வழங்கி அவர்க ளுக்கான உதவி தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க முன்னாடி வங்கிகளை கேட்டுக் கொண்டார்.

    நமக்கு நாமே திட்ட பணிகள் நடைபெற்று வருவதையும் எஞ்சியுள்ள பணிகள் குறித்தும், நகராட்சி நிர்வாகம் மற்றும் பேரூராட்சிகள் துறைகளை கேட்டதிலிருந்து அப்பணி களை விரைவாக முடிக்கவும் உத்தர விட்டார்கள்.

    அனைத்து துறை அலுவலர்களும் தமிழ்நாடு அரசின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு திட்டங்களில் தனி கவனம் செலுத்தி நிலுவையில் உள்ள பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.

    இதில் பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக மாவட்ட கலெக்டர் மூலமாக, தன்னுடைய கவனத்திற்கு தெரிவிக்கவும் கண்காணிப்பு அலுவலர் உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • கிராம அளவிலான முதல் பொறுப்பாளர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.
    • ஒலிப்பெருக்கி பொருத்திய வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு முறையான முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை செய்ய வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், பருவமழையின் போது ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையிலும், இழப்புகளை தவிர்க்கும் நோக்கத்திலும், நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர்கொள்ள தயார்படுத்திக்கொள்ளும் வகையில் பேரிடர் மேலாண்மைக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்), மருத்துவத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி கலெக்டர் பேசுகையில், மாவட்டத்தில் சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் பாதிக்கப்படவுள்ள பகுதிகளுக்கான கிராம, வார்டு அளவிலான வரைப்படங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    கிராம அளவிலான முதல் பொறுப்பாளர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். தற்காலிக நிவாரண முகாம்கள் முழுமையாக தணிக்கை செய்து, தயார் நிலையில் உள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

    புதியதாக பாதிக்கப்படவுள்ள பகுதி ஏதும் கண்டறியப்பட்டால் அவற்றின் விவரங்களை உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். முதல் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து குழுக்களிலும் பெண்கள், தன்னார்வலர்கள் உள்ளனரா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    மேலும், வட்ட அளவில் பாம்புகள் பிடிக்கும் நபர்கள் விவரங்கள், மோட்டார் படகுகள், பரிசல்கள் விபரங்கள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அவசரகால சூழ்நிலைகளில் பங்கெடுத்து பணியாற்றும் வகையில் தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், தகவல் தொடர்பு நிறுவனங்கள், ஆயில் கார்பரேஷன் நிறவனங்கள் ஆகியோர் அடங்கிய கோட்ட அளவிலான கூட்டம் நடத்தி பேரிடர் காலத்தில் பங்காற்ற அறிவுறுத்த வேண்டும்.

    பேரிடமர் மீட்பு மற்றும் வெளியேற்றுத்தல் பணிகளுக்கு தேவையான சாதனங்கள் ஜே.சி.பி, மர அறுவை இயந்திரங்கள், வாகனங்கள், மோட்டார் படகுகள், பரிசல்கள், உயர் மின் விளக்குகள், மோட்டார் பம்பு செட்டுகள், டீசல் ஜெனரேட்டர், மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள், அவை உள்ள இருப்பிடம் மற்றும் உரிமையாளர் விபரங்கள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    ஒலிப்பெருக்கி பொருத்திய வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு முறையான முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை செய்ய வேண்டும்.

    மேலும், அனைத்து துறை அரசு அலுவலர்களும் மழை, வெள்ளம், புயல், இடி மின்னல் போன்ற பேரிடங்களை முன்கூட்டியே அறிந்துகொள்ள முன்னெச்சரிக்கை செயலியினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

    தென்மேற்கு பருவமழையின் போது, நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர்கொள்ள தயார்படுத்திக்கொள்ளும் வகையில், இழப்புகளை தவிர்க்கும் நோக்கத்திலும் பேரிடம் மேலாண்மைக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் முழுமையான அளவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

    இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், ஓசூர் சார் ஆட்சியர் சரண்யா, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் முகமது அஸ்லாம், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் பூபதி, டிஎஸ்பி தமிழரசி, நிர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் குமார், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • காவல் நிலையங்களில் பதிவு செய்த வழக்குகளையும் விவரங்களையும் நிலுவையில் உள்ள வழக்கு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
    • காவல் நிலையங்களில் சிறப்பாக பணிபுரிந்த போலீசா இருக்கு எஸ்.பி.ஸ்டீபன் ஜோசப் பாதம் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டம் எஸ் பி ஸ்டீபன் ஜேசுதாஸ் தலைமையில் நடைபெற்றது.

    இதில் காவல் நிலையங்களில் பதிவு செய்த வழக்குகளையும் விவரங்களையும் நிலுவையில் உள்ள வழக்கு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது காவல் கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், மற்றும் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் செந்தில்குமார், இமயவர்மன், ராதாகிருஷ்ணன், ரவிக்குமார், சிந்து மற்றும் அனைத்து காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து காவல் நிலையங்களில் சிறப்பாக பணிபுரிந்த போலீசா இருக்கு எஸ்.பி.ஸ்டீபன் ஜோசப் பாதம் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

    • போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குற்றத் தடுப்பு நடவடிக்கை கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
    • ஒவ்வொரு போலீஸ் நிலைய எல்லைகளிலும் அதிகப்படியான சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்களை பொருத்த வேண்டும்.

    அன்னதானப்பட்டி:

     சேலம் நெத்திமேட்டில் உள்ள மாவட்ட போலீஸ்

    சூப்பிரண்டு அலுவலகத்தில் குற்றத் தடுப்பு நடவடிக்கை கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் தலைமை தாங்கி பேசியதாவது:-

    குற்றத் தடுப்பு மற்றும் கண்காணிப்பு செய்ய மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலைய

    எல்லைகளிலும் அதிகப்படியான சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்களை பொருத்த வேண்டும். பழுதடைந்த கேமராக்களை சரி செய்தல் வேண்டும். போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தி, வீடுகளிலும் கேமிராக்கள் பொருத்த பொது மக்க ளுக்கு அறிவுறுத்த வேண்டும். மாவட்டத்தில் கடந்த 5 வருடங்களில் அதிக விபத்துக்கள் நடந்த இடங்களை கணக்கெடுத்து, அந்த இடங்களை போலீசார்

    கள ஆய்வு செய்து, அங்கு

    விபத்து தடுப்பு நடவ டிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கஞ்சா, புகை யிலைப் பொருட்கள், சந்துக் கடை களில் மது விற்பனை, கள்ளச் சாராயம் காய்ச்சுதல் உள்ளிட்டவற்றை ஒழிக்க

    கடுமையான நடவடிக்கை கள் எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் கூடுதல் போலீஸ்

    சூப்பிரண்டு கென்னடி, துணை போலீஸ் சூப்பி ரண்டுகள் விஜயக்குமார், ஆரோக்கியராஜ், சங்கீதா, ராமச்சந்திரன், ஹரிசங்கரி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நலத்திட்ட உதவி வழங்கினார்
    • வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வேலூர் திருவண்ணாமலை திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி ஜவகர் தலைமை தாங்கினார்.

    ஆதிதிராவிட நலத்துறை இயக்குனர் ஆனந்த் தாட்கோ மேலாண்மை இயக்குனர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வரவேற்று பேசினார்.

    தாட்கோ தலைவர் மதிவாணன் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு 76 பேருக்கு துறை சார்ந்த நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கதிர் ஆனந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், அமலு விஜயன், ஈஸ்வரப்பன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் புண்ணியகோட்டி நன்றி கூறினார்.

    • விழுப்புரம் மாவட்டத்தில் குழந்தை வளர்ச்சித்திட்டம் சார்ந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
    • கர்ப்பிணி பெண்கள் அதிகளவில் உள்ளதால் சுகாதாரத்துறையுடன் இணைந்து சிறப்பு கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலம் மற்றும் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் களுக்கான திட்டம் சார்ந்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில் நடைபெற்றது.  ஆய்வுக்கூட்டத்தில், சமூக நலம் மற்றும் குழந்தை வளர்ச்சித் திட்டத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் 1,781 அங்கன்வாடி மையங்களில் 13,365 கார்ப்பிணி பெண்களும் 10,168 பாலூட்டும் தாய்மார்களும் 1,00,322 (0-6 வயது) இணை உணவு பெறும் குழந்தைகளும், 43,897 மதிய உணவு பெறும் குழந்தைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் வளர்ச்சி நிலையை வயது வாரியாக ஆய்வு செய்ததுடன், அதில் காணை, கோலியனூர், மைலம், திருவெண்ணைநல்லூர் ஆகிய வட்டாரங்களில் கடுமையான ஊட்டச்சத்து குறை பாடுடைய குழந்தை களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளதால் சிறப்பு கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார். 

    மேலும், கர்ப்பிணி பெண்களிடையே காணப்படும் ரத்தசோகை குறித்த ஆய்வில் மரக்காணம் வட்டாரத்தில் ரத்தசோகை உடைய கர்ப்பிணி பெண்கள் அதிகளவில் உள்ளதால் சுகாதாரத்துறையுடன் இணைந்து சிறப்பு கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப் பட்டதுடன், அங்கன்வாடி மையங்களுக்கு வரும் குழந்தைகள் பாதுகாப்பான, சுத்தம் மற்றும் சுகாதாரமான சூழ்நிலையில் முன்பருவ கல்வி பயில ஏதுவாக மையங்கள் இருத்தல் வேண்டும் என அறிவுறுத்தியதுடன், அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து தோட்டம் அமைக்க இடவசதி உள்ள அனைத்து மையங்களிலும் ஊட்டச்சத்து தோட்டம் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் மாவட்ட திட்ட அலுவலர் அன்பழகி, மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம்மாள், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×